/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
/
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 10, 2024 11:48 PM

திருப்பூர் : திருப்பூர் மேட்டுப் பாளையம் எஸ்.வி., காலனி 8வது வீதியில் உள்ள, ஸ்ரீசித்தி விநாயகர், ஆதிசக்தி விநாயகர், பாலமுருகன், மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், விஷ்ணு துர்கா, ஸ்வர்ண வாராஹி, தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா கோவில் கும்பாபி ேஷகம் நேற்று கோலா கலமாக நடந்தது.
மங்களவாத்திய கணபதி வழிபாட்டுடன் விழா துவங்கியது. சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க, யாகசாலை வேள்வி பூஜைகள் துவங்கின. கடந்த, 8ம் தேதி முதல் யாகசாலை வேள்வி பூஜைகள் விமரிசையாக நடந்தன.
நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம்கால வேள்வி பூஜைகள் துவங்கியது. நிறைவேள்வியை தொடர்ந்து, காலை, 8:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகின. காலை, 9:45 முதல், 10:15 மணி வரை, மங்கள வாத்திய இசை, பக்தர்களின் வாழ்த்து கோஷங்களுடன், கும்பாபிேஷக விழா நடைபெற்றது.
ஸ்ரீசித்திவிநாயகர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கும்பாபிேஷகம் நடந்தது; தொடர்ந்து, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று முதல், தினமும் மாலை நேரம், 12 நாட்களுக்கு மண்டலாபிேஷக பூஜை நடக்கும்; வரும், 22ம் தேதி மண்டலாபி ேஷக நிறைவு விழா நடக்குமென, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்பாடுகளை, ஸ்ரீசித்தி விநாயகர் அறக்கட்டளை நிர்வாகிகள், திருப்பணி கமிட்டியினர், விழா கமிட்டியினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.