/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாகன ஓட்டிகளை குழப்பும் வழிகாட்டி பலகை
/
வாகன ஓட்டிகளை குழப்பும் வழிகாட்டி பலகை
ADDED : மார் 08, 2025 11:14 PM

அவிநாசி: அவிநாசியை அடுத்த பழங்கரை பகுதியில், பைபாஸ் ரோட்டின் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகளை குழப்பம் ஏற்படுத்தும் விதமாக வழிகாட்டி பலகையை அமைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் குழம்பி தவிக்கின்றனர்.
அவிநாசியில் இருந்து பெருமாநல்லுார் செல்லும் வழியில் உள்ள பைபாஸ் ரோட்டில் சர்வீஸ் சாலையில் வேலுார் பிரிவு அருகே வைக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகளுக்கான வழிகாட்டி பலகையில், வேலுார் செல்லும் பகுதியை குறிப்பிட்டு திருமுருகன்பூண்டி செல்ல, 8 கி.மீ., எனவும், திருமுருகன்பூண்டி செல்வதற்கான வழியை குறிப்பிட்டு வேலுாருக்கு ஒரு கி.மீ., என எழுதப்பட்டுள்ளது.
அதேபகுதியில் பைபாஸ் ரோட்டில் மறுபுறத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டில், பெருமாநல்லுாரில் இருந்து அவிநாசி நோக்கி வரும் போது பச்சாம்பாளையம் செல்லும் பிரிவில் திருமுருகன்பூண்டி செல்ல, 8 கி.மீ., எனவும், வேலுார் செல்ல ஒரு கி.மீ., எனவும் சரியாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், உள்ளூரில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே சரியான பாதை எது என்பது தெரிந்த நிலையில், வெளியூரிலிருந்து வருபவர்கள் வழி தெரியாமல் பல நேரத்தில் பாதை மாறி சென்று மீண்டும் பலரிடம் வழி கேட்டதும் நடந்துள்ளதாக சிலர் கூறினர். எனவே, உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சரியான வழிகாட்டி பலகையை அமைக்க வேண்டும்.