/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
/
மதுக்கடைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
ADDED : ஆக 04, 2024 11:34 PM

திருப்பூர் : திருப்பூர், நல்லுார் பஸ் ஸ்டாப் அருகே, மதுக்கடை மற்றும் பார் அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. பஸ் ஸ்டாப் அருகிலேயே, கோவில், சர்ச், குடியிருப்புகள் உள்ளன.
பள்ளி, கல்லுாரிக்கு செல்வோரும், பணிக்கு செல்வோரும், அங்கு நின்றுதான் பஸ்சில் ஏறி செல்கின்றனர். போக்குவரத்து நிறைந்த பகுதியில், மதுக்கடை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அப்பகுதி மக்களும், கவுன்சிலர் விஜயலட்சுமியும், ஏற்கனவே மதுக்கடை அமைக்க கூடாதென, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
நல்லுார் சுற்றுப்பகுதிகளில் உள்ள வீதிகளில், பொதுமக்கள் நேற்று, கையெழுத்து இயக்கம் நடத்தினர். மதுக்கடை அமைய எதிர்ப்பு தெரிவித்து, கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளுக்கு சென்று, மக்களிடம் கையெழுத்து வாங்கினர். விரைவில், கலெக்டரை சந்தித்து, மதுக்கடை வராமல் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.