/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சில்வர் லீப்' மாண்டிசோரி புதிய பள்ளி திறப்பு விழா
/
'சில்வர் லீப்' மாண்டிசோரி புதிய பள்ளி திறப்பு விழா
'சில்வர் லீப்' மாண்டிசோரி புதிய பள்ளி திறப்பு விழா
'சில்வர் லீப்' மாண்டிசோரி புதிய பள்ளி திறப்பு விழா
ADDED : மார் 10, 2025 12:38 AM

திருப்பூர், ; திருப்பூர், ஆண்டிபாளையம், முல்லை நகர் பகுதியில், முழுவதும் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புடன், 'சில்வர் லீப்' மாண்டிசோரி பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
பள்ளி தாளாளர் பத்மநாபன், முதல்வர் கோமதி உள்ளிட்டோர் வரவேற்றனர். பள்ளி தலைவர் முத்துக்குமாரசாமி, 'சில்வர் லீப்' பள்ளியை திறந்து வைத்தார். வகுப்பறைகளை, கிட்ஸ் கிளப் பள்ளி தலைவர் மோகன்கார்த்திக் திறந்து வைத்தார்.
பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி எல்லையில், இரண்டு ஏக்கர் பரப்பில், குழந்தைகளுக்கு ஏற்ற பசுமையான சூழலில், பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை, சிறந்த சாதனையாளர்களாக உருவாக்கும் வகையில், சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 'மாண்டிசோரி' வகுப்பறைகள், தலா, 1,000 சதுரடி பரப்பளவில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்காக, ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் தாங்களாகவே கற்றுணரும் வகையில், மாண்டிசோரி சுற்றுச்சூழலில் அமைத்துள்ளோம். இப்பள்ளி, கற்றல் பயணத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும்.