/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிந்து மெட்ரிக் பள்ளிமாநில அளவில் சாதனை
/
சிந்து மெட்ரிக் பள்ளிமாநில அளவில் சாதனை
ADDED : மே 12, 2024 06:42 AM

திருப்பூர்: தாராபுரம், சிந்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், மாநில அளவில், அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். மாணவி சரண்யா, 497 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம்; மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
மாணவி நர்மஹர, 496 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாமிடம், மாநில அளவில் நான்காமிடம் பெற்றார். மாணவி அங்கீதா, 495 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்றார். தேர்வெழுதிய அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.
ஒரு மாணவர், 3 பாடங்களில், 100 மதிப்பெண்; 6 மாணவர்கள், 2 பாடங்களில், 100 மதிப்பெண் பெற்றனர். கணக்கு பாடத்தில், 4 பேர்; அறிவியல் பாடத்தில், 7 பேர்; சமூக அறிவியல் பாடத்தில், 8 பேர், 100 மதிப்பெண் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பள்ளி தாளாளர் சுரேஷ்குமார், பள்ளி நிர்வாகி கோபாலன், பள்ளி முதல்வர் கணேசன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி, பரிசு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் ராஜசேகர பாண்டியன் செய்திருந்தார். ஆசிரியர், பெற்றோர் மாணவர்களை பாராட்டினர்.