/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோடிக்கு எதிராக கோஷம்: தி.மு.க., - பா.ஜ., வாக்குவாதம்
/
மோடிக்கு எதிராக கோஷம்: தி.மு.க., - பா.ஜ., வாக்குவாதம்
மோடிக்கு எதிராக கோஷம்: தி.மு.க., - பா.ஜ., வாக்குவாதம்
மோடிக்கு எதிராக கோஷம்: தி.மு.க., - பா.ஜ., வாக்குவாதம்
ADDED : ஏப் 06, 2024 11:52 PM
திருப்பூர்;ஓட்டு சேகரிப்பு பணியில், மோடிக்கு எதிராக கோஷமிட்ட தி.மு.க.,வினர் தட்டிக் கேட்ட பா.ஜ., வினருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் முருகானந்தம்; தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகின்றனர்.
நேற்று மாலை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டுவளவு பகுதியில், பா.ஜ., தொண்டர்கள் ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதேசமயம், தி.மு.க., கூட்டணியினர் கட்சி கொடி மற்றும் துண்டுப் பிரசுரங்களுடன், சிலர் 'நவீன மனிதர்கள்' என்ற பனியன் அணிந்தும் சுப்பராயனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்துச் சென்றனர்.காட்டுவளவு பிரதான வீதியில் பா.ஜ.,வினர் கடந்து சென்ற போது, தி.மு.க., கூட்டணியினர் சிலர் மோடிக்கு எதிராக திடீரென கோஷமிட்டனர்.
ஆவேசமடைந்த பா.ஜ.,வினர் இது குறித்து கேட்ட போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தெற்கு போலீசார் இரு தரப்பையும் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர்.

