/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறு சேமிப்பு மோசடி; புகார் அளிக்க அழைப்பு
/
சிறு சேமிப்பு மோசடி; புகார் அளிக்க அழைப்பு
ADDED : மே 10, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:தாராபுரம், எஸ்.வி.ஆர்., வெங்கட்ராம செட்டியார் தங்க நகை கடையில் பல்வேறு நகை சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அளித்த புகார்களை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., விசாரித்து வருகின்றார்.
தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்தவர்கள் மற்றும் இதுவரை புகார் கொடுக்காதவர்கள் அசல் ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் டி.எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, ராணி பில்டிங்ஸ், 3வது மாடி, திருப்பூர் ரோடு, அவிநாசி, என்ற முகவரியில் நேரில் வந்து புகார் தரலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.