/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழலுக்கு பகையாகும் புகை மாசு!
/
சுற்றுச்சூழலுக்கு பகையாகும் புகை மாசு!
ADDED : செப் 05, 2024 12:36 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சுற்றியுள்ள பேரூராட்சி, ஊராட்சிகள் என, அடர்த்தியான நகரமாக உருவெடுத்து வருகிறது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, அரசு, தனியார் பஸ்கள், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவிநாசி ரோடு, காங்கயம், தாராபுரம் ரோடு, பி.என்., ரோடு மற்றும் பல்லடம் ரோடு என பிரதான ரோடுகளில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து விட்டது.
பெரும்பாலான வாகனங்கள் புகை தள்ளிய படி சென்று, மாசு ஏற்படுத்துகிறது. வாகனங்கள் உமிழும் கார்பன் அளவு அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: திருப்பூரில் மாணவர்கள், பனியன் தொழிலாளர்கள் பெரும்பாலும் பைக், கார்களை பயன்படுத்துகின்றனர்.
தினமும் பல ஆயிரம் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் அளவை குறைக்க, குறிப்பிட்ட ஒரு நாள் கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தினர், என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவினர், சொந்த வாகனங்களை தவிர்த்து பொது வாகனங்களை பயன்படுத்தினால், வெளியேறும் கார்பன் அளவு வெகுவாக குறையும்; சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும்.
திருப்பூரில் எந்தவொரு நிகழ்ச்சியை முன்னெடுத்தாலும், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனத்தினர் முழு பங்களிப்பை, வழங்கி அதனை வெற்றி பெறச் செய்வர். அந்த வகையில், புகைமாசு தவிர்க்க, பொது போக்குவரத்து பயன்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கு, மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.