/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பின்றி வீணாகும் சோலார் கட்டமைப்பு
/
பராமரிப்பின்றி வீணாகும் சோலார் கட்டமைப்பு
ADDED : பிப் 28, 2025 11:30 PM
உடுமலை,; உடுமலையில் பராமரிப்பின்றி சோலார் மின் உற்பத்தி கட்டமைப்பு வீணாகி வருகிறது.
உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி, உரல்பட்டி ஓடையில், குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இக்கிணற்றில் மின் மோட்டார் பொருத்தபட்டு, இங்கிருந்து கிராமத்திலுள்ள பொது மற்றும் வீட்டு இணைப்புகளுக்கு, குடிநீர், பொது உபயோகத்திற்கு நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த, 4 ஆண்டுக்கு முன், ஊராட்சியின் மின் செலவினத்தை குறைக்கும் வகையிலும், சோலார் கட்டமைப்பு நிறுவப்பட்டது. இதிலிருந்து, மின் உற்பத்தி செய்து, அதிலிருந்து குடிநீர் மின் மோட்டார் இயக்கும் வகையில், அமைக்கப்பட்டது.
ஒரு சில மாதங்கள் மட்டும், இயங்கிய சோலார் கட்டமைப்பு தொடர்ந்து பராமரிக்கப்படாமல், வீணாகி வருகிறது. சோலார் பேனல்கள் உடைந்தும், பேட்டரிகள், மின் வயர்கள் அறுக்கப்பட்டும், காட்சிப்பொருளாக மாறியுள்ளது. இதிலிருந்து, வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் திட்டமும் முடங்கியுள்ளது. எனவே, சோலார் கட்டமைப்புகளை புதுப்பிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.