/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோலார் மின் உற்பத்தி; 'நெட்வொர்க்' கட்டணம் ரத்தாகுமா?
/
சோலார் மின் உற்பத்தி; 'நெட்வொர்க்' கட்டணம் ரத்தாகுமா?
சோலார் மின் உற்பத்தி; 'நெட்வொர்க்' கட்டணம் ரத்தாகுமா?
சோலார் மின் உற்பத்தி; 'நெட்வொர்க்' கட்டணம் ரத்தாகுமா?
ADDED : ஜூலை 10, 2024 11:47 PM

திருப்பூர்: 'கூரையின் மீது சோலார் பேனல் வைத்துள்ள அனைவருக்கும் 'நெட்வொர்க்' கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்'' என்று 'நிட்மா' கோரிக்கை விடுத்துள்ளது.
பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா) சார்பில், எம்.பி., சுப்பராயனுக்கு பாராட்டு விழா நடந்தது. ராயபுரம் எம்.கே.எம்., ஓட்டலில் நடந்த விழாவில், தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். பொதுசெயலாளர் ராஜாமணி, பொருளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் கோபிநாத் வரவேற்றார்.
திருப்பூர் பனியன் தொழிலில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கோரி, எம்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்:
தமிழகத்தில், 3.50 லட்சம் மின்நுகர்வோர் உள்ளனர்; தனியாரிடம், உயர் அழுத்த மின்சாரம் பெறப்படுகிறது. குறு, சிறு தொழில்துறையினர் அனைவரும் மின்வாரியத்திடம் மட்டுமே மின்சாரம் பெறுகின்றனர். தனியார் ஜெனரேட்டர் கட்டணத்தை காட்டிலும், யூனிட்டுக்கு, 1.15 பைசா அதிகமாக வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது.
நிலை கட்டணம் 430 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது; தொழிற்சாலை இயங்காவிட்டாலும், பணம் செலுத்த வேண்டும் என்பதால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலை கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
சோலார் மின் உற்பத்திக்கு, யூனிட்டுக்கு, 'நெட்வொர்க்' கட்டணமாக, 76 பைசா விதிக்கப்படுகிறது. சோலார் முதலீட்டு மானியம் 25 சதவீதம் என்று அறிவித்த அரசு, இதுவரை செயல்படுத்தவில்லை.
உயரழுத்தம், தாழ்வழுத்தம் என்ற வேறுபாடு பாராமல், கூரையின் மீது சோலார் பேனல் வைத்த அனைவருக்கும், 'நெட்வொர்க்' கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வெல்டிங் லைனுக்கு, விதிக்கும், 15 சதவீத கூடுதல் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை, அதிகபட்சம் 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்திக்கொள்ள, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
திருப்பூர் தொழில்துறையினரின் மின் கட்டண உயர்வு பிரச்னைக்கு, எம்.பி., என்ற முறையில் நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.