ADDED : ஜூலை 31, 2024 01:01 AM

நிதி கேட்கும் நகராட்சி
திருமுருகன்பூண்டி நகரட்சி தலைவர் குமார், சமீபத்தில், உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவை சந்தித்து அளித்த மனு குறித்து கூறுகையில், ''பூண்டி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டிலும், ரோடு, கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும். சாலையோரத்தில், குடிநீர் குழாய் பதித்து, 30 ஆண்டு கடந்துவிட்ட நிலையில், மாற்றி அமைக்க வேண்டும். இத்தகைய பணிகளை செய்து முடிக்க, 6.88 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை ஒதுக்க வேண்டும் என, அமைச்சரிடம் மனு வழங்கியுள்ளோம். அவரும், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்,'' என்று கூறினார்.
முருங்கை விலை குறைகிறது
ஆடி மாத சீசனில் கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவாகவே விலை போவது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழை இல்லாதது, காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் ஆடி மாத துவக்கத்தில் விலை குறையாமல் இருந்தது. ஒரு கிலோ, 80 ரூபாய் வரை விலை போனது. முருங்கை சீசன் தாமதமாக துவங்கியுள்ளது. வரத்து ஓரளவு அதிகரித்துள்ளதால் விலை சரிய துவங்கியுள்ளது. மர முருங்கை கிலோ 20 ரூபாய்; செடி முருங்கை, 30 ரூபாய்; கரும்பு முருங்கை, 35 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் வாரங்களில் வரத்து அதிகரித்து, விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
வேளாண் பயிற்சி நிறைவு
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஊரக வாழ்வாதார திட்டத்தில் உள்ள வேளாண் மகளிருக்கான,5 நாள் பயிற்சிமுகாம்நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், தலைமையில், விஞ்ஞானிகள் துக்கையண்ணஜன், சரவணன் பயிற்சிஅளித்தனர்.அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ரேணுகா தேவி, சுமித்ரா, ராஜேந்திரன், கவிதாஸ்ரீ ஆகியோர் பயிர் மோண்மை, பயிர் பாதுகாப்பு, இயற்களை வளங்களை பாதுகாப்பதுகுறித்துஆலோசனை வழங்கினர்.பஞ்சகவ்யா, தசகவ்யா உட்பட பல்வேறு இயற்கை பொருள்தயாரிக்கசெய்முறை பயிற்சிவழங்கப்பட்டது.
மாணவருக்கு கல்வி உதவி
பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்பதில் மாவட்ட கல்வி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் உயர் கல்விக்காக தொழில் அமைப்புகள், தன்னார்வலர்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க முன் வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி, இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில், ஏழை மாணவர்களின் உயர் கல்விக்காக இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதன் தலைவர் இந்திரா சுந்தரம், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினார்.
சிவஞான குரு பூஜை விழா (படம்)
அவிநாசியில், சிவஞான பூஜை முப்பெரும் விழா நடந்தது. கூனம்பட்டி வேத பாடசாலை முதல்வர் நடராஜ சுவாமி முன்னிலை வகித்தார். பெங்களூரு வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம், வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, ஆனந்த சிவாச்சாரியார், அருணந்தி சிவம், வாழ்த்துரை வழங்கினர். திருமுறை ஞானப் பாடல், சிவன்மலை முருகன் போற்றி பாமாலை நுாலை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாச சுவாமி வெளியிட்டு பேசினார். விழா ஏற்பாடுகளை அவிநாசி ஆரூர சிவாச்சாரியார், சிவன்மலை சிவவிக்னேச சிவாச்சாரியார், குளித்தலை பொன் சபாபதி செய்திருந்தனர்.
அங்கன்வாடி மையம் திறப்பு
திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு கேத்தம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் கட்ட வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 14 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாநகராட்சி இரண்டாவது மண்டல தலைவர் கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி, முன்னாள் கவுன்சிலர் ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல இந்திய கம்யூ., கட்சி குழு சார்பில், ஆர்ப்பாட்டம், 15வேலம் பாளையம் மின் வாரிய அலுவலகம் முன் நடந்தது. இந்திய கம்யூ., மூத்த நிர்வாகி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். முனியன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர் செல்வராஜ், மண்டல துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கட்சி நிர்வாகிகள் நடராஜ், ஹரிஹர சுதன், முருகன், சதீஷ்குமார், பாரதி மற்றும் பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மின் கடட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மின் கட்டண உயர்வை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல இந்திய கம்யூ., கட்சி குழு சார்பில், ஆர்ப்பாட்டம், 15வேலம் பாளையம் மின் வாரிய அலுவலகம் முன்நடந்தது. இந்திய கம்யூ., மூத்த நிர்வாகிகல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். முனியன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர் செல்வராஜ், மண்டல துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கட்சி நிர்வாகிகள் நடராஜ், ஹரிஹர சுதன், முருகன், சதீஷ்குமார், பாரதி மற்றும் பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மின் கடட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.