sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சில வரி செய்திகள்... 

/

சில வரி செய்திகள்... 

சில வரி செய்திகள்... 

சில வரி செய்திகள்... 


ADDED : மே 04, 2024 12:13 AM

Google News

ADDED : மே 04, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரத்த தான முகாம் (படம்)

திருப்பூர் காஜாபட்டன் உரிமையாளர்கள் சங்கம், தையல் நுால் வியாபாரிகள் சங்கம் சார்பில், மே தின ரத்த தான முகாம், அரண்மனைப்புதுார் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. காஜாபட்டன், தையல் நுால் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று, ரத்த தானம் செய்தனர். முகாமில், 63 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ரத்தம் தானமாக வழங்கிய கொடையாளர்களை, காஜாபட்டன் உரிமையாளர் சங்கத்தினர் உட்பட பலர் பாராட்டினர்.

---

மே தின விழா பொதுக்கூட்டம்

திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம், அரிசிக்கடை வீதியில் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., நிர்வாகி ஜெயபால் வரவேற்றார். சி.ஐ.டி.யு., துணை பொது செயலாளர் திருச்செல்வன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., தேசிய துணைத்தலைவர் சுப்பராயன் சிறப்புரை ஆற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கராஜ், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜன், அரசு பணியாளர் சங்க நிர்வாகி மாரிமுத்து, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க நிர்வாகி பழனிசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

---

குரு பெயர்ச்சி யாஹ பூஜை

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரசமர மணிகண்ட சுவாமி ஐயப்பன் கோவில் உள்ளது. திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழில் வலம் சிறக்க, குடும்ப நலம் பெருக இந்த கோவிலில் வழிபட்டால் காரியம் கைகூடம் என நம்பப்படுகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற கோவிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் யாஹ பூஜை நடந்தது. இப்பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று, குரு பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

---

நீர்மோர் பந்தல் திறப்பு

திருநங்கையர் அமைப்பு சார்பில், நீர மோர் பந்தல் திறப்பு விழா நெருப்பெரிச்சல் அருகேயுள்ள வாவிபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர், நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர். முதல் நாளான நேற்று வெள்ளரி, தர்பூசணி, இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், திருநங்கையர் அமைப்பு தலைவி திவ்யா, தி.மு.க., பகுதி செயலாளர் ஜோதி, உட்பட பலர் பங்கேற்றனர்.

---

மரக்கன்றுகள் பராமரிப்பு (படம்)

மே தின விடுமுறை நாளில், அரசு கல்லுாரி மாணவர்கள் மரக்கன்றுகளை பராமரித்து, தண்ணீர் ஊற்றினர். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவர்கள் மூலம் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மே 1 விடுமுறை நாளான நேற்று, மாணவர் செயலர் மதுகார்த்திக் தலைமையில், மாணவர்கள் ராஜபிரபு, காமராஜ், விஜய், கிருஷ்ணமூர்த்தி, கவிபாலா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மரக்கன்றுகளை பராமரித்து, தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

---

நகை பறித்த ஆசாமி கைது

திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்வேதா, 23. இவர் நேற்று மதியம் திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். தாராபுரம் அருகே டீ சாப்பிட பஸ் நிறுத்தினர். பயணிகள் இறங்கி டீ சாப்பிட சென்றிருந்தனர். பஸ்சில் அமர்ந்திருந்த ஸ்வேதாவிடம், அதே பஸ்சில் வந்த செல்வராஜ், 34 என்பவர், ஏழு சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினார். ஸ்வேதாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி, வாலிபரை பிடித்து ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

---

நகை பறித்தவர் கைது

திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்வேதா, 23. இவர் நேற்று மதியம் திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். தாராபுரம் அருகே டீ சாப்பிட பஸ் நிறுத்தினர். பயணிகள் இறங்கி டீ சாப்பிட சென்றிருந்தனர். பஸ்சில் அமர்ந்திருந்த ஸ்வேதாவிடம், அதே பஸ்சில் வந்த செல்வராஜ், 34 என்பவர், ஏழு சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினார். ஸ்வேதாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி, வாலிபரை பிடித்து ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us