ADDED : செப் 17, 2024 11:46 PM

கும்பாபிஷேக விழா
பொங்கலுார் ஒன்றியம், உகாயனுாரிலுள்ள விநாயகர், கோட்டை மாரியம்மன், மாகாளியம்மன், காமாட்சியம்மன், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதலில், மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், மாகாளியம்மன், கோட்டை மாரியம்மன் மற்றும் பரிபார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை அல்லாளபுரம்ஸ்ரீ உலகேஸ்வரசுவாமி கோவில் நடராஜ சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். விழாவல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
மாணவர்கள் விழிப்புணர்வு
திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு,மத்திய பஸ் ஸ்டாண்டில் கலைநிகழ்ச்சி நடந்தது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாசுகட்டுப்பாடு உதவி சுற்றுசூழல் பொறியாளர் ரமேஷ் பங்கேற்று, ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். திருப்பூர் மாநகர தெற்கு இன்ஸ்பெக்டர் (குற்றப்பிரிவு) உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மையக்கருத்தினை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ், மஞ்சப்பை வழங்கப்பட்டது.