/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு குறுமைய சதுரங்கம் அரசு பள்ளி மாணவர் அசத்தல்
/
தெற்கு குறுமைய சதுரங்கம் அரசு பள்ளி மாணவர் அசத்தல்
தெற்கு குறுமைய சதுரங்கம் அரசு பள்ளி மாணவர் அசத்தல்
தெற்கு குறுமைய சதுரங்கம் அரசு பள்ளி மாணவர் அசத்தல்
ADDED : செப் 08, 2024 12:06 AM
திருப்பூர் : தெற்கு குறுமைய மாணவ, மாணவியர் சதுரங்க போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லுாரியில் நேற்று நடந்தது. 11, 14, 17 மற்றும், 19 வயது மாணவ, மாணவியருக்கு ஒரே நாளில் போட்டி நடந்ததால், சதுரங்க போட்டியாளர் கூட்டம் அரங்கம் முழுதும் நிரம்பியிருந்தது.
மாணவர் பிரிவு
பதினொரு வயது பிரிவில் கிட்ஸ்கிளப் பள்ளி கிருஷ்ணந்த் முதலிடம், வித்யவிகாசினி பள்ளி விசாகன், 2வது இடம், லிட்டில் பிளவர் பள்ளி ஷர்சிக்வர்தன், 3வது இடம். 14 வயது பிரிவில் விகாஸ் வித்யாலயா பள்ளி ஸ்ரீஹரிஷ் முதலிடம், வித்யவிகாசினி பள்ளி இன்பா 2வது இடம், செஞ்சுரி பள்ளி பிரணவ்மித்ரன், 3வது இடம்.
17 வயது பிரிவில், பிரண்ட்லைன் அகாடமி மித்லேஷ், பிரைட் பப்ளிக் பள்ளி ஸ்ரீயாஷ், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உதயகார்த்திபன் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர். 19 வயது பிரிவில் முதலிடம் பத்மபிரியன் (இடுவம்பாளையம் பள்ளி), இரண்டாவது, மூன்றாவது இடம் முறையே பத்ரி, தவனேஷ்வரன் (கிட்ஸ் கிளப் பள்ளி). இப்போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர், விரைவில் பள்ளிகல்வித்துறை நடத்தும் மாவட்ட சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.