/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு குறுமைய கோ கோ மணி பப்ளிக் பள்ளி வெற்றி
/
தெற்கு குறுமைய கோ கோ மணி பப்ளிக் பள்ளி வெற்றி
ADDED : செப் 01, 2024 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், தெற்கு குறுமைய மாணவர் கோ கோ போட்டி, முதலிபாளையம் நிப்ட் - டீ கல்லுாரியில் நடந்தது.
14 மற்றும் 17 வயது பிரிவினருக்கான இறுதி போட்டிகளை தொடர்ந்து, சூப்பர் சீனியருக்கான, 19 வயது இறுதி போட்டி துவங்கியது. துவக்கம் முதலே அதிரடி காட்டிய, திருப்பூர், தாராபுரம் ரோடு, மணி பப்ளிக் அகாடமி பள்ளி அணி, திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி அணியை, 20 - 11 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அசத்தல் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணி வீரர்களை பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் உட்பட பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.