/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விண்வெளி தின அறிவியல் போட்டி பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
/
விண்வெளி தின அறிவியல் போட்டி பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
விண்வெளி தின அறிவியல் போட்டி பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
விண்வெளி தின அறிவியல் போட்டி பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 20, 2024 02:16 AM
உடுமலை:உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் இஸ்ரோ சார்பில், தேசிய விண்வெளி தின சிறப்பு நிகழ்ச்சி ஆக., 23ல் நடக்கிறது.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, இஸ்ரோ ஸ்பேஸ் டியூட்டர் என்ற திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரி சார்பில், மாணவர்களுக்கான தேசிய விண்வெளி தின நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சந்திராயன் - 3 விக்ரம் லேண்டரை, நிலவில் கடந்தாண்டு ஆக., 23ம் தேதி வெற்றிகரமாக தரை இறக்கியது. இதை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு தேசிய விண்வெளி தினத்தில், 'நிலவை தொடும்போது உயிர்களை தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சாகா' என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகிறது.
உடுமலையில், இந்த நிகழ்ச்சி வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 23ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க, மாணவர்கள் அன்றைய நாளில், காலை, 8:30 மணி முதல், 9:30 மணி வரை, தங்களின் பெயர்களை நிகழ்ச்சி நடக்கும் கல்லுாரிக்குச்சென்று பதிவு செய்யலாம்.
தொடர்ந்து இஸ்ரோ சாதனைகள் குறித்த மாதிரி பொருட்கள் கண்காட்சி, அறிவியல் வினாடி வினா, ஓவியப்போட்டி, போஸ்டர் வடிவமைத்தல் மற்றும் சந்திராயன் - 3 ரோவர் மற்றும் லேண்டர் மாதிரி தயாரிக்கும் பயிற்சி பட்டறை நடக்கிறது.
போட்டிகள் ஒன்று முதல் பிளஸ் 2 அனைத்து வகுப்புகளுக்கும், பிரிவு வாரியாக நடத்தப்படுகிறது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, இஸ்ரோவின் மாதிரிகள், தொலைநோக்கி, பைனாகுலர், மடிப்பு நுண்ணோக்கி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இஸ்ரோவின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
போட்டியில் பங்கேற்பது குறித்து, கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதற்கு கலிலியோ அறிவியல் கழகம், 87782 01926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.