/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : மே 24, 2024 11:16 PM
திருப்பூர் : 'வார விடுமுறையை முன்னிட்டு இன்றும், நாளையும், 40 சிறப்பு பஸ் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிறு) 40 சிறப்பு பஸ்களை திருப்பூர் மண்டலம் இயக்குகிறது.
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் வழித்தடத்தில், 15, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருவண்ணாமலை வழித்தடத்தில், 10, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் மார்க்கமாக, 15 என மொத்தம், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
மத்திய பஸ் ஸ்டாண்டில், முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகளுக்காக டிக்கெட் முன்பதிவு மையம் செயல்படுகிறது. காலையில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் இரவு அலைச்சல் இல்லாமல், டிக்கெட் உறுதி செய்து பயணத்தை தொடரலாம்.

