நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில், நிலுவை தொகை வசூல் சிறப்பு முகாம் வரும், 14ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்தாண்டு பத்திரப் பதிவு துறை முதன்மை செயலர், துறை தலைவர், அமைச்சர் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பத்திரப் பதிவு துறையில் உள்ள நிலுவை இனங்களை வசூலிக்க உரிய சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில், அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான முகாம் வரும் 14ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலுவையில் உள்ள வருவாய் இனங்களை செலுத்தி, தங்கள் சொத்து மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.