ADDED : மார் 25, 2024 11:45 PM

திருப்பூர்;தமிழக அரசின் 'நீட்' தேர்வுக்கான சிறப்பு வகுப்பு நேற்று துவங்கியது. தொடர்ந்து, மே, 2ம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.
நடப்பாண்டுக்கான 'நீட்' தேர்வுக்கு மே, 5 ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு மாவட்டத்தில், 500க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில், நீட் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், ஜெய்வாபாய், கே.எஸ்.சி., தாராபுரம், என்.சி.பி., பல்லடம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை, ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஐந்து பள்ளிகளில் பயிற்சி நேற்று துவங்கியது. காலை, 9:15 மணிக்கு துவங்கிய பயிற்சி, மாலை, 4:30 மணி வரை நடந்தது. தொடர்ந்து, மே, 2ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளது. ஒவ்வொரு வாரத்துக்கான பயிற்சி, பாடம் குறித்து அந்தந்த வாரம் சனிக்கிழமைகளில் தேர்வு நடத்தப்படுமென என, 'நீட்' ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
