/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் ஊராட்சி விளையாட்டு மன்றம் வீரர்களின் திறன்களை மேம்படுத்த சிறப்பு குழு
/
கிராமங்களில் ஊராட்சி விளையாட்டு மன்றம் வீரர்களின் திறன்களை மேம்படுத்த சிறப்பு குழு
கிராமங்களில் ஊராட்சி விளையாட்டு மன்றம் வீரர்களின் திறன்களை மேம்படுத்த சிறப்பு குழு
கிராமங்களில் ஊராட்சி விளையாட்டு மன்றம் வீரர்களின் திறன்களை மேம்படுத்த சிறப்பு குழு
ADDED : ஜூன் 24, 2024 10:49 PM
உடுமலை;கிராமப்பகுதியிலுள்ள விளையாட்டு வீரர்கள், தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கு, அரசின் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டு, நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகளுக்கான பேட், பால், நெட், அளவு டேப், ஜெர்ஸி என, 33 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கப்பட வேண்டும். அதன் தலைவராக ஊராட்சித்தலைவரும், மற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமப்பகுதியிலும், விளையாட்டில் திறமையுள்ள வீரர்கள், ஊராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சி பெறலாம்.
அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் உபகரணங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கும், முறையாக இருப்பு வைப்பதற்கும், விளையாட்டு பயிற்சி தொடர்ந்து நடப்பதை கண்காணித்து, அதற்கான சிறப்புக்கூட்டம் நடத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அளவிலும் அதற்கான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாதமும் அனைத்து ஊராட்சிகளிலும், விளையாட்டு மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாட வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்வதற்கான இடம் தேர்வு செய்து, ஊராட்சி நிர்வாகத்தினர் பயிற்சி நடப்பதை கண்காணிக்கவும் வழிமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊராட்சியிலும், மக்கள் தொகை அடிப்படையில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள, 38 ஊராட்சிகளுக்கு மொத்தமாக, 59 செட்களும், மடத்துக்குளத்தில் உள்ள, 11 ஊராட்சிகளுக்கு, 18 செட்களும், குடிமங்கலத்தில் உள்ள, 23 ஊராட்சிகளுக்கு, 32 செட்களும் வழங்கப்பட்டுள்ளன.