/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 4ல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைகேட்பு கூட்டம்
/
வரும் 4ல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைகேட்பு கூட்டம்
வரும் 4ல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைகேட்பு கூட்டம்
வரும் 4ல் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைகேட்பு கூட்டம்
ADDED : பிப் 28, 2025 11:02 PM
உடுமலை, ; முன்னாள் படைவீரர் மற்றும் படையில் பணிபுரியும் வீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் படையில் பணிபுரியும் படை வீரர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் மார்ச், 4ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தொழில் துவங்க ஒரு கோடி ரூபாய் வரை, 30 சதவீத மானியத்துடன் வங்கி கடன் பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
முன்னாள் படைவீரர்கள், படையில் பணிபுரிவோர், அவர்களை சார்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை இரண்டு பிரதிகளாக காலை, 10:00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.