/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வன அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
வன அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 29, 2024 03:07 AM

உடுமலை;உடுமலை வனச்சரக அலுவலர்களுக்கு, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்ட கள இயக்குனர் ராமசுப்ரமணியம் அறிவுறுத்தல் படி, திருப்பூர் ரோட்டரி கிளப் சார்பில் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் மருத்தவ முகாம் நடந்தது.
திருப்பூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா முன்னிலை வகித்தார்.
வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், அலுவலக பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது.
உடுமலை ராம் மருத்துவமனை, ஆர்வி கண் மருத்துவமனை, திருப்பூர் ஹரீஸ் பல் மருத்துவமனை சார்பில் முகாம் நடந்தது.
அலுவலர்கள், பணியாளர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பல் தொடர்பான பிரச்னைகளை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்கப்பட்டன.
கூடுதல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.