/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
/
பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : செப் 15, 2024 01:35 AM

பல்லடம்: காரணம்பேட்டையில் நடந்த பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், ஏராளமான பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சென்னை பெண் மற்றும் ஆண் நலம் மருத்துவமனை, கோவை புற்றுநோய் மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இரண்டு நாட்களாக நடந்தது.
ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
முன்னதாக, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்ப்புண், மார்பக புற்றுநோய்மற்றும் ஆண்களுக்கான வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை நடந்தது. நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் உதவியுடன், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில், பங்கேற்று பயனடைந்தனர்.