ADDED : மே 06, 2024 12:10 AM

மழை வேண்டி திருப்பூரில் உலமாக்கள் சபை சார்பில் நேற்று நான்கு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமாக்கள் சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் சார்பில், இவை நடத்தப்பட்டன.
காங்கயம் ரோடு, அல் அமீன் பள்ளி வளாகத்தில் நடந்த தொழுகைக்கு பெரிய பள்ளி வாசல் தலைமை இமாம் முப்தி சல்மான் பாரிஸ் பாகவி தலைமை வகித்தார். மவுலவி அகமதுல்லா பாகவி பிரார்த்தனை நடத்தினார். அவிநாசி ரோடு, கபர்ஸ்தான் பள்ளி வாசலில் காதர்பேட்டை பள்ளி வாசல் தலைமை இமாம் அப்துல்லா பாகவி, மவுலவி நாஸிர் அகமத் சிராஜி கலந்து கொண்டனர். மங்கலம் பள்ளிவாசல் சார்பில் எம்.எஸ்.ஜெ.எம்., மகாலில் மில்லத்துல்லா பாகவி, முகமது சாலிக் பாகவி ஆகியோர் முன்னிலையில் தொழுகை நடந்தது.
பல்லடம், அறிவொளி நகர் பகுதி பள்ளி வாசலில், தமீம் அன்சாரி பைசி, மவுலவி அப்பாஸ் சிராஜி தலைமையில் தொழுகை நடந்தது. திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவுலவி முப்தி உமர்பாரூக் மழாஹிரி, செயலாளர் அபுதாகிர் நுாராணி, பொருளாளர் சபியுல்லா தாவூதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.