ADDED : ஏப் 17, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;செகந்திராபாத் - கொல்லம் இடையே கோடை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதன் தோறும் மாலை, 6:40க்கு செகந்திராபாத்தில் புறப்படும் ரயில், மறுநாள் இரவு, 11:55க்கு கொல்லம் வந்து சேரும்.
ரயில் இயக்கம், வரும், 17ம் தேதி துவங்குகிறது. ஜூன், 26 வரை புதன்தோறும் இயங்கும். திருப்பூரை வியாழன் மதியம், 2:25 க்கு கடக்கும்.
வெள்ளிதோறும் கொச்சுவேலியில் இருந்து மாலை 4:20க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06081) ஞாயிறு மதியம், 1:00 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் செல்லும். முன்னதாக, சனிக்கிழமை அதிகாலை, 3:20க்கு திருப்பூரை கடந்து செல்லும். மே 31 வரை இந்த ரயில் இயங்கும்.

