/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி
/
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி
ADDED : மே 11, 2024 11:29 PM
திருப்பூர் : பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாநகராட்சி சார்பில் நடந்தது.
சமீபத்தில் வெளியான 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் தேர்ச்சி பெறவில்லை. இம்மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாநகராட்சி சார்பில் நேற்று நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். மாநகர நல அலுவலர் கவுரி சரவணன், திருப்பூர் ஐ.டி.ஐ., முதல்வர் பிரபு, முதன்மை கல்வி அலுவலர் கீதா, பாரதியார் பல்கலை ஆராய்ச்சி அறிஞர் சத்யா, குழந்தைகள் நல ஆலோசகர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர்கள், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.
இதில், தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களை எதிர் வரும் துணை தேர்வில் பங்கேற்க வைத்து தேர்ச்சி பெற வைப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளிகளில் இம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தல், தன்னம்பிக்கை கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியன குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அனைத்து மாணவர்களும் துணை தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும். பள்ளி இடைநிற்றலை முழுமையாக தவிர்த்து தொடர்ந்து உயர் கல்வி பயில வேண்டும். ஐ.டி.ஐ., போன்ற தொழிற்கல்வி வாய்ப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.