/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வு மாணவருக்காக அவிநாசியில் சிறப்பு வழிபாடு
/
பொதுத்தேர்வு மாணவருக்காக அவிநாசியில் சிறப்பு வழிபாடு
பொதுத்தேர்வு மாணவருக்காக அவிநாசியில் சிறப்பு வழிபாடு
பொதுத்தேர்வு மாணவருக்காக அவிநாசியில் சிறப்பு வழிபாடு
ADDED : பிப் 23, 2025 02:42 AM

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, அவிநாசி ஸ்ரீசாய் பாபா மந்திரில், ஸ்ரீஹயக்ரீவர் சிறப்பு யாகம் நேற்று நடந்தது.
காலை, 10:00 மணிக்கு, ஹயக்ரீவர் யாகம் துவங்கியது; பல்வேறு வழிபாடுகளை தொடர்ந்து யாகம் நிறைவு செய்யப்பட்டது; காலை, 11:00 மணி முதல், பாபா அஷ்டோத்திரமும், மதியம் 12:00 மணிக்கு பகல் ஆரத்தி வழிபாடும் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வெற்றி பெற வேண்டிய சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது. மாணவ, மாணவியர் பெயர், நட்சத்திரம், பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களை பெற்று, சிறப்பு வழிபாடு நடத்தப்படடது. அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகளிடம் மாணவ, மாணவியர் அருளாசி பெற்றனர்.