/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாறு நீர்வழிப்பாதை துார்வாரும் பணி வேகம்
/
நல்லாறு நீர்வழிப்பாதை துார்வாரும் பணி வேகம்
ADDED : அக் 18, 2024 06:45 AM

அவிநாசி : அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் உள்ள நல்லாற்று நீர்வழிப் பாதை பல மாதங்களாக துார்வாரப்படவில்லை.
களைச்செடிகள், புற்கள் மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் அடித்து வரும் கழிவுகள் என மழைநீர் வடிகாலில் செல்ல வழியற்ற நிலை இருந்தது.
கலெக்டர் அறிவுறுத்தலின் படி வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக பல பகுதிகளில் நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அவிநாசியில் மழை நீர் வடிகால் மற்றும் நீர்வழிப்பாதைகளை கண்காணித்து சுத்தப்படுத்துதல் மற்றும் துார்வாரும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சீனிவாசபுரம் முதல் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பழைய பஸ் நிலையம் பின்புறம் வழியாக செல்லும் நல்லாற்று நீரோடையில் ஒரு கி.மீ., துாரம் வரை பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் மேற்பார்வையில் பணி நடக்கிறது.