நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், குமரானந்தபுரத்தில் உள்ள திருஞான சம்பந்தர் குடில் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு சிறப்பு ஆன்மிக பட்டிமன்றம் நடந்தது.
பட்டிமன்றத்துக்கு மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் சத்துருக்கன் தலைமை வகித்தார். திருஞான சம்பந்தர் குடில் நிர்வாகி சம்பந்தம், பொருளாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். மன்ற பொது செயலாளர் அஸ்லாம் வரவேற்றார். சிறப்பு பட்டிமன்றத்துக்கு கவிஞர் நாதன் ரகுநாதன் நடுவராக, இருந்து நடத்தினார். 'வாழும் மனிதர் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பது யார்? முன்னோர்கள் என்ற அணியில் செலின் ராணி, ஜானகி மற்றும் பெற்றோர்களே என்ற அணியில் வளர்மதி, கிருஷ்ணவேணி, அகரிசி ஆலம்பாபா ஆகியோர் பேசினர். கவுன்சிலர் பத்மா மற்றும் மாரிமுத்து சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.