/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்யாசாகர் பள்ளியில் விளையாட்டு போட்டி
/
வித்யாசாகர் பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : ஆக 30, 2024 11:15 PM

திருப்பூர்:திருப்பூர், கூலிபாளையம் நால்ரோடு, வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி துவக்கிவைத்தார்.
நான்கு குழுக்கள் உருவாக்கப்பட்டு, கூடைப்பந்து, கால்பந்து, எறிபந்து, 50 மீ., ஓட்டம், 400 மீ., தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், மென்பந்தாட்டம் உள்ளிட்டவை நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ்களை, பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் சிவப்ரியா மாதேஸ்வரன், முதல்வர் சசிரேகா பாலசுப்ரமணியம் ஆகியோர் வழங்கினர். மாணவர்களின் உதவும் மனப்பான்மையை வளர்க்க, சிற்றுண்டிக் கடைகள் அமைக்கப்பட்டு, அதில் ஈட்டிய தொகையை ஆதரவற்ற இல்லத்திற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் பள்ளி சார்பாக மேற்கொள்ளப்பட்டது.