/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துயரம் துடைக்க முன்வந்த துளிர்கள்
/
துயரம் துடைக்க முன்வந்த துளிர்கள்
ADDED : ஆக 12, 2024 11:54 PM

திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சையத் அலி - சந்திரா ஆகியோரின் மகள், நபீஷா; வாவிபாளையம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். அதே குடியிருப்பை சேர்ந்த பிரகாஷ் - சசிரேகாவின் மகள் சுபிக் ஷா; ஆறாம் வகுப்பு படிக்கிறார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இவ்விரு மாணவியரும் இணைந்து, சுயமாக நிதி திரட்டியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர், பொதுமக்கள் மற்றும் தாங்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களிடம், உண்டியலில் நிதி வசூல் செய்துள்ளனர்.
குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த மாணவியர் இருவரும், வயநாடு நிவாரண நிதிக்காக தாங்கள் வசூலித்த தொகையை, கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.
மாணவியர் கூறுகையில், 'பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதியோடு, மக்களிடம் நிதி திரட்டி, கலெக்டரிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த உண்டியலில் எவ்வளவு தொகை உள்ளது என எண்ணிக்கூடப் பார்க்கவில்லை; நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு எங்களால் இயன்றதை செய்துள்ளோம்,' என்றனர். அரசு பள்ளி மாணவியரின் மனிதநேயத்தை, அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

