/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவையில் சிறந்த 'ஸ்ரீசத்ய சாயி'
/
சேவையில் சிறந்த 'ஸ்ரீசத்ய சாயி'
ADDED : செப் 01, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் கண்பரிசோதனை முகாம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
பி.என்., ரோடு, மில்லர் ஸ்டாப், ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில், நேற்று நடந்த முகாமில், மொத்தம், 246 பேர் பங்கேற்றனர்; 51 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 102 பேர் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அடுத்த முகாம் அக்., 6ம் தேதி (முதல் ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.