/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ குருசர்வா சி.ஏ., அகாடமிமாணவர் சேர்க்கை துவக்கம்
/
ஸ்ரீ குருசர்வா சி.ஏ., அகாடமிமாணவர் சேர்க்கை துவக்கம்
ஸ்ரீ குருசர்வா சி.ஏ., அகாடமிமாணவர் சேர்க்கை துவக்கம்
ஸ்ரீ குருசர்வா சி.ஏ., அகாடமிமாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஆக 18, 2024 02:20 AM

திருப்பூர்;சி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, ஸ்ரீ குருசர்வா சி.ஏ., அகாடமியில் துவங்கியது.
ஸ்ரீகுருசர்வா சி.ஏ., அகாடமி சி.இ.ஓ. அருணாச்சலம், தாளாளர் சுதாராணி அருணாச்சலம் கூறியதாவது:
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, முழுநேர பயிற்சி வகுப்புடன் இயங்கி வரும், ஸ்ரீ குருசர்வா சி.ஏ., அகாடமி, சி.ஏ., படிப்பிற்கென்றே கடந்த, 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தற்போது, பிளஸ் 2 மற்றும் கல்லுாரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், தற்போதே பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்களது பொது தேர்வு முடிந்த பின், சி.ஏ., பயிற்சி வகுப்பு துவங்கும்.சி.ஏ., இன்டர் தேர்வில், எங்கள் அகாடமியில் பயின்ற ராஜேஷ், தேசிய அளவில், 23வது இடம், காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங் பாடத்தில் ஜெயக்குமார், 100க்கு 97, விஷ்ணுபாண்டி, 96 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் சாதனை படைத்தனர்.கடந்த மே, 24ல் நடந்த இன்டர் தேர்வில், 12 மாணவர்கள், இரண்டு குரூப்களிலும் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றனர். மேலும், சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில், கடந்த, 11 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று, சாதனை படைத்து வருகிறது. இலவச ஆலோசனைக்கு, 96009 22888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--
அருணாச்சலம், சுதாராணி