/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலங்கை தமிழர்களுக்கு வீடு வசதி கிடைப்பது தேயுே! நிலம் வகை மாற்றம் இழுபறியால் கேள்விக்குறி
/
இலங்கை தமிழர்களுக்கு வீடு வசதி கிடைப்பது தேயுே! நிலம் வகை மாற்றம் இழுபறியால் கேள்விக்குறி
இலங்கை தமிழர்களுக்கு வீடு வசதி கிடைப்பது தேயுே! நிலம் வகை மாற்றம் இழுபறியால் கேள்விக்குறி
இலங்கை தமிழர்களுக்கு வீடு வசதி கிடைப்பது தேயுே! நிலம் வகை மாற்றம் இழுபறியால் கேள்விக்குறி
ADDED : நவ 15, 2024 11:14 PM

பல்லடம் ; நிலம் வகை மாற்றம் செய்வதில் சிக்கல் நீடித்து வருவதால், பருவாய் கிராமத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வீடு கிடைப்பது கேள்விக்குறியாகி வருகிறது.
பல்லடத்தை அடுத்த, பருவாய் கிராமத்தில், 1990ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில், 105 குடும்பத்தினர் இருந்த நிலையில், தற்போது, 54 குடும்பத்தினர் உள்ளன. அரசு சார்பில், கடந்த, 30 ஆண்டுக்கு முன் இவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இவை, மிகவும் சேதம் அடைந்த நிலையில், 18 வீடுகள் மட்டும் புதுப்பித்து தரப்பட்டன.
மீதமுள்ள, 36 வீடுகள் இடிந்து விழும் நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. கடந்த ஆண்டு, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, 36 வீடுகள் இடிக்கப்பட்டு புதுப்பித்து தரப்படும் என உறுதி அளித்தனர். ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று வரை வீடுகள் கட்டித் தரப்படவில்லை. மேற்கூரை இல்லாமலும், சுற்றுச்சூழல் சேதமடைந்த நிலையிலும், மிகவும் ஆபத்தான சூழலில், இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கான குடியிருப்புகளை கட்டித் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் வசித்து வரும் பகுதி மந்தை புறம்போக்கு என்ற வகையில் உள்ளது. இதை, நத்தம் புறம்போக்காக வகை மாற்றம் செய்தால்தான், வீடுகள் கட்ட முடியும் என்ற நிலை உள்ளது. நிலத்தை வகை மாற்றம் செய்வதில், சில அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அரசு அறிவித்து ஒரு ஆண்டு ஆகியும், குடியிருப்புகள் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட துவங்கப்படவில்லை.
தொடர் மழை பெய்து வரும் நிலையில், இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பத்தினர், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, நிலத்தை உடனடியாக வகை மாற்றம் செய்து, வீடுகள் கட்டித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குடியிருப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.

