/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசத்ய சாய் சேவா மையம் இலவச கண் சிகிச்சை முகாம்
/
ஸ்ரீசத்ய சாய் சேவா மையம் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : மே 04, 2024 11:46 PM
திருப்பூர்;ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம் சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவாநிறுவனம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று காலை 8:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், கண்புரை அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, அறுவை சிகிச்சை, லென்ஸ், மருந்து, தங்குமிடம் மற்றும் உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
திருப்பூர், பி.என்., ரோடு, மில்லர் பஸ் ஸ்டாப் அருகேயுள்ள, ஸ்ரீசத்ய சாய் சேவா மையத்தில் இம்முகாம் நடக்கிறது. முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 93671 44955 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.