/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் 9ம் தேதி மஹா கும்பாபிஷேகம்
/
ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் 9ம் தேதி மஹா கும்பாபிஷேகம்
ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் 9ம் தேதி மஹா கும்பாபிஷேகம்
ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் 9ம் தேதி மஹா கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 07, 2024 12:58 AM
திருப்பூர்;வாய்க்கால் தோட்டம், ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வரும் 9 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
திருப்பூர், ெஷரீப் காலனி, வாய்க்கால் தோட்டம் பகுதியில், 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டப அறக்கட்டளைக்குச் சொந்தமான ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோவில் உள்ளது.
திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, தங்க முலாம் கோபுரம், நீரூற்று விநாயகர், கன்னிமூல கணபதி, சுப்ரமணியர் சன்னதி ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. மஹா கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதி காலை, 7:45 மணிக்கு நடைபெறுகிறது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார்.
கும்பாபிேஷக விழா நேற்று காலை விநாயகர் வழிபாடு மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலை வாஸ்து சாந்தி மற்றும் ஹோமம் நடந்தது.
இன்று (7ம் தேதி) காலை தனபூஜை, கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம்; மாலை 5:00 மணிக்கு முளைப் பாலிகை ஊர்வலம், காப்பு கட்டுதல், முதல்கால யாக பூஜை ஆகியன நடைபெறவுள்ளது.
நாளை (8ம் தேதி), 2ம் கால யாக பூஜை, கோபுர கலா ஸ்தாபிதம், அஷ்டபந்தனம், 3ம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி ஆகியன நடக்கிறது.
9ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜை ஆகியவற்றை தொடர்ந்து, 7:45 மணிக்கு கோவில் கும்பாபிேஷகம் நடைபெறும்.
தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.
விழா ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் திருமண மண்டப அறக்கட்டளை தலைவர் கண்ணன் என்கிற கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.