ADDED : ஆக 11, 2024 01:20 AM

அவிநாசி;சேவூர், ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 30. இவரது மனைவி மகாலட்சுமி 25. வீட்டின் வெளியே நின்று கணவன் - மனைவி பேசிக் கொண்டிருந்தனர்.
ராஜ வீதியில் வசித்து வரும் பிரவீன், 24,என்பவர் குடிபோதையில் மகாலட்சுமியை கிண்டல் செய்துள்ளார். அதனை அருண்குமார் தட்டி கேட்டு சத்தம் போட்டார். அங்கிருந்து சென்ற பிரவீன், நகரை சேர்ந்த தனது நண்பர் கவுதமனை அழைத்து சென்று, அருண்குமாரின் இரண்டு கைகளிலும் கிழித்தார். தடுக்க வந்த அருண்குமாரின் உறவினர் மோகன்குமாரையும் கத்தியால் காதில் கிழித்துள்ளார்.
இதனால், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அருகிலிருந்தவர்கள், இருவரையும் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் பிரவீன், கவுதமன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
---
கைதான வாலிபர்கள்.
