/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்
/
மாநகராட்சி பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்
ADDED : மார் 10, 2025 12:40 AM

திருப்பூர்; திருப்பூர், வீரபாண்டியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகப் பின்புறம் சங்கிலிப் பள்ளம் ஓடை கடந்து செல்கிறது.
ஓடை கடந்து செல்லும் ரோட்டில் உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் ஓடையில் கழிவு நீர் பெருமளவு தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
அப்பகுதியினர் கூறுகையில், ''சங்கிலிப் பள்ளம் ஓடையில் இந்த இடம் சற்று ஆழமாக அமைந்துள்ளது. இதனால், ஓடையில் நீர் சென்றாலும் இங்கு நீர் தேங்கி நிற்பது வழக்கம். மேலும், இங்கு பாலம் கட்டுமானப்பணி நடந்த போது, குவிக்கப்பட்ட மண் குவியல் காரணமாக நீர் தடையின்றிச் செல்வதில் தடை ஏற்பட்டது.
இதனால், நீர் தேங்குவது அதிகரித்துள்ளது. இப்பகுதியில் முறையாக ஓடையைத் துார் வாரி, கழிவு நீர் தேங்காமல் கடந்து செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.