/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாற்றுப்பண்ணைகளில் தக்காளி நாற்றுக்கள் தேக்கம்
/
நாற்றுப்பண்ணைகளில் தக்காளி நாற்றுக்கள் தேக்கம்
ADDED : ஜூலை 03, 2024 09:29 PM
உடுமலை : உடுமலையில் பருவ மழை தாமதம் மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக, நாற்றுப்பண்ணைகளில் நாற்றுக்கள் தேக்கம் அடைந்துள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்பிளவர் உள்ளிட்ட சாகுபடியில், நாற்றுப்பண்ணைகளில், 20 முதல், 25 நாட்கள் வரை வளர்த்தப்பட்ட நாற்றுக்களை விவசாயிகள் வாங்கி நடவு செய்து வருகின்றனர்.
செடிகள் அழுகுதல், காய்கள் சிறுத்துபோதல் என சிக்கல்கள் ஏற்படுவதால், தக்காளி சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.
நாற்றுப்பண்ணையாளர்கள் கூறுகையில்,'கடந்த மாதம், தக்காளி நாற்றுக்கள் விற்பனை அதிகளவு காணப்பட்டது. உற்பத்தி அதிகரிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக விற்பனை குறைந்துள்ளது,' என்றனர்.