/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படிக்கட்டு பயணம்; மாணவருக்கு ஆபத்து
/
படிக்கட்டு பயணம்; மாணவருக்கு ஆபத்து
ADDED : மார் 08, 2025 11:18 PM

திருப்பூர்: அரசு பஸ் படிக்கட்டில் தொங்கிய படி மாணவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நகருக்குள் இத்தகைய நிலை இருந்தும், போலீசார் கண்டுகொள்வதில்லை. போக்குவரத்து துறையினரும் ஆய்வு நடத்துவதில்லை.
விஜயமங்கலத்தில் இருந்து ஊத்துக்குளி, பெரியபாளையம் வழியாக திருப்பூருக்கு டவுன் பஸ் (8 பி) இயக்கப்படும். நேற்று காலை ஊத்துக்குளி ரோட்டில் பயணித்த இந்த பஸ்சின் (டி.என்., 33 என் 2583) பின்புற படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணித்தனர்.
பஸ் படிக்கட்டில் பயணிகள், மாணவர்கள் தொங்கியபடி பஸ் இயக்கக்கூடாது என டிரைவர், நடத்துனர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தினர். நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். ஆனால், நடத்துனர், டிரைவர் இருவரும் கண்டுகொள்ளாமல் பஸ் இயக்கினர். இது போன்ற விதிமீறல்களை போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் நகருக்குள், மெயின் ரோட்டில் கண்டுகொள்வதே இல்லை; விபத்து ஏற்படும் முன் விழித்துக்கொண்டால் நல்லது.