/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று துவங்குகிறது! 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்களே, மிஸ் பண்ணிடாதீங்க!
/
இன்று துவங்குகிறது! 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்களே, மிஸ் பண்ணிடாதீங்க!
இன்று துவங்குகிறது! 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்களே, மிஸ் பண்ணிடாதீங்க!
இன்று துவங்குகிறது! 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்களே, மிஸ் பண்ணிடாதீங்க!
ADDED : மார் 30, 2024 12:06 AM
திருப்பூர்;பிளஸ் 2 மாணவ, மாணவியர், பெற்றோர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்று துவங்குகிறது; இரண்டு நாட்கள் நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வெழுதி முடித்துள்ள மாணவர்கள், உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய்யலாம், வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் படிப்பு எவை, திறன்களை வளர்த்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க, தினமலர் நாளிதழ் சார்பில் வழிகாட்டி நிகழ்ச்சி, இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது.
இன்று (30ம் தேதி) காலை, 9:30 மணிக்கு, கருத்தரங்கு நிகழ்வுகள் துவங்குகிறது. கண்காட்சி அரங்கம், காலை, 10:00 மணிக்கு திறக்கப்படுகிறது. 'கலை படிப்புகளுக்கான எதிர்காலம்' எனும் தலைப்பில், கோவை, எஸ்.என்.ஆர்., கல்லுாரி பேராசிரியை டாக்டர்.சித்ரா, '21ம் நுாற்றாண்டில் திறன்கள்' எனும் தலைப்பில், 'நாஸ்காம்' அமைப்பு தேசிய தலைவர் உதயசங்கர், 'அறிவியல் படிப்புகளும், எதிர்காலமும்' எனும் தலைப்பில், ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டியூஷன்ஸ் டாக்டர் ஜெகஜீவன், 'ஜவுளித்துறையில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்' எனும் தலைப்பில், நிப்ட்-டீ கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம் ஆகியோர் பேசுகின்றனர்.
வழிகாட்டி நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பை எளிதாக்கும் 'டாப்' துறைகள், வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள், படிக்கும் போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், உடனடி வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகள், அரசு வேலை வாய்ப்புகள், நீட் தேர்வு குறித்து பிரத்யேக விளக்கம், கவுன்சிலிங் நடைமுறை, கட் ஆப் வாய்ப்பு, நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிப்பது எப்படி என்பது குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் தரப்படுகிறது. கருத்தரங்கு நிறைவில், நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள், பெற்றோர் துறை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்களுடன் ஆலோசிக்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ணா
கல்வி குழுமங்கள்
'தினமலர்' நாளிதழுடன், கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. மாணவ, மாணவியர், பெற்றோர் பார்வையிட, 70 க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் அரங்குகள், முன்னணி பல்கலை கழகங்களின் ஸ்டால்கள் ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில், உயர்கல்விக்கான படிப்புகள், விண்ணப்பம், கட்டணம் உள்ளிட்ட விபரங்களை முழுமையாக மாணவர், பெற்றோர் அறிந்து கொள்ளலாம்.
'ஸ்பான்சர்' கல்லுாரிகள்
'தினமலர்' நாளிதழுடன், வழிகாட்டி நிகழ்ச்சியை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அமிர்த விஷ்வ வித்யா பீடம் முக்கிய பங்களிப்பாளர்களாகவும், கே.எம்.சி.,எச்., டாக்டர் என்.ஜி.பி., இன்ஸ்டியூசன்ஸ், ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, சேரன் குரூப் ஆப் இன்ஸ்டியூசன்ஸ், கற்பகம் கல்வி நிறுவனம், தி இன்ஸ்டியூட் ஆப் சர்டேட் அக்கவுண்ட் ஆப் இந்தியா, ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லுாரிகள் ஸ்பான்சர்களாக பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், www.kalvimalar.com என்ற இணையதளத்திலோ அல்லது 91505 74442 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ, பதிவு செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, அனுமதி இலவசம்

