/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
/
மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
ADDED : ஆக 09, 2024 01:27 AM

உடுமலை:உடுமலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின், 6வது தாராபுரம் கோட்ட பேரவை கூட்டம் நடந்தது.
கோட்டத்தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் பாலசுப்ரமணியம், பொதுச்செயலாளர் அம்சராஜ், துணைத்தலைவர் சிங்கராயன், கோட்ட செயலாளர் தில்லையப்பன், இணைச்செயலாளர் மணிமொழி, பொருளாளர் முருகசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால், சுங்கவரி வசூல் கொள்ளையால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, 3,500 சாலைப்பணியாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும். இதனால், கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்.
எனவே, இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தர ஊதியம்,, கருணை அடிப்படையில் வேலை, முதுநிலைப்பட்டியலை முறைப்படுத்தி, பதவி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அரசு ஊழியர் சங்க வளாகத்திலிருந்து, மண்டபம் வரை சாலைப்பணியாளர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.
ஓய்வூதியர் சங்கத்தலைவர் தாசன், மாவட்டச்செயலாளர் பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.