/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கபடி போட்டி: திருப்பூர் அணி பங்கேற்பு
/
மாநில கபடி போட்டி: திருப்பூர் அணி பங்கேற்பு
ADDED : மே 03, 2024 11:32 PM

திருப்பூர்;மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டியில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட அணி வழியனுப்பி வைக்கப்பட்டது.
வரும் 6ம் தேதி முதல் சென்னை, பொன்னேரியில், 25 வயதுக்கு உட்பட்ட சீனியர் பிரிவு ஆண்களுக்கான மாநில அளவிலான யுவா பிரீமியர் லீக் கபடி போட்டி நடக்கிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த, 12 அணிகள் பங்கேற்கிறது. ஏ மற்றும் பி பிரிவு என, இரு பிரிவுகளில் தலா, எட்டு அணிகள் வீதம் கலந்து கொள்கின்றன. முதல் பரிசு, 20 லட்சம், இரண்டாம் பரிசு, 15 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு, 10 லட்சம் மற்றும் நான்காம் பரிசு, ஆறு லட்சம் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா கிளப் அணி வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான விளையாட்டு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வழியனுப்பும் விழா நடந்தது. திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைமை புரவலர் சுப்ரமணியம், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
அணி பயிற்சியாளர் தண்டபாணி, மேலாளர் வினோத், அணி தலைவர் கன்னீஸ்வரன் தலைமையில் வீரர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.