/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில துப்பாக்கி சுடும் போட்டி :சென்னை அணிக்கு கோப்பை
/
மாநில துப்பாக்கி சுடும் போட்டி :சென்னை அணிக்கு கோப்பை
மாநில துப்பாக்கி சுடும் போட்டி :சென்னை அணிக்கு கோப்பை
மாநில துப்பாக்கி சுடும் போட்டி :சென்னை அணிக்கு கோப்பை
ADDED : செப் 02, 2024 12:40 AM

திருப்பூர்:வெள்ளகோவில், கொங்குநாடு ரைபிள் கிளப் சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, கடந்த, 23ம் தேதி துவங்கியது.
அமைச்சர் சாமிநாதன் போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் அசோசியேஷனில் பயிற்சி மேற்கொண்ட, 245 வீரர்கள் பங்கேற்றனர். 'ட்ராப்', 'டபுள் ட்ராப்', 'ஸ்கீட்' ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிேஷக் குப்தா, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று, பார்வையிட்டனர். நிறைவு விழா கடந்த, 30ம் தேதி நடந்தது. தனிநபர் ஆண்கள் பிரிவில் யுகன், திருநாவுக்கரசு, அபிமன்யு பிரகாஷ், பெண்கள் பிரிவில், தனுஷ்கா, நிவேதா, நிலா ஆகியோர் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.
சென்னை ரைபிள் கிளப் அணி, நான்கு கோப்பைகளை கைப்பற்றி முதலிடம் பெற்றது. முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பைகளை வழங்கி, பாராட்டினர்.