/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடு, மாடுகளை கடித்து குதறும் தெரு நாய்கள்
/
ஆடு, மாடுகளை கடித்து குதறும் தெரு நாய்கள்
ADDED : மார் 11, 2025 04:19 AM
உடுமலை, : உடுமலை கோட்டமங்கலம் பகுதியில், ஆடு, மாடு, கோழிகளை கடித்து குதறும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கோ.குமாரபாளையத்தில், தெரு நாய், வெறி நாய்கள் அதிகளவு சுற்றி வருகிறது. விவசாய நிலங்கள், கோழிப்பண்ணைகளுக்குள் புகுந்து, ஆடு, மாடுகளையும், கோழிகளையும் கடித்து குதறி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பொதுமக்களையும் கடித்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிகளவு தெரு நாய்களை சுற்றி வருதோடு, அந்நாய்கள் உணவு இல்லாமல் வெறி நாய்களாக மாறி வருகிறது.
எனவே, தெரு நாய்களை விரைவாக பிடிக்கும் பணியை தொடங்க வேண்டும், என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்,கூட்டுறவு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி, அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.