ADDED : மே 13, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ‘ஆன்லைனில்’ விண்ணப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கக் கல்லுாரியிலேயே பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உதவி மையத்தில் துறை சார்ந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கப்படுகிறது. இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
