/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாட்டிலால் கையை கிழித்து மாணவர் தற்கொலை முயற்சி
/
பாட்டிலால் கையை கிழித்து மாணவர் தற்கொலை முயற்சி
ADDED : மார் 07, 2025 11:12 PM

அவிநாசி; அவிநாசி ஒன்றியம், உப்பிலிபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் மெய்ஞானம், 19. கருமத்தம்பட்டி அருகே பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., முதலாம் ஆண்டு படிக்கிறார்.
இரண்டாண்டுக்கு முன், ஒரு பெண்ணைக் காதலித்தார். தற்போது அப்பெண், அவிநாசியில் உள்ள பேன்ஸி கடையில் பணிபுரிகிறார். சில நாள் முன், காதலை முறித்துக்கொள்ள விரும்பினார் அந்த பெண். மெய்ஞானம் சம்மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெண் பணிபுரியும் கடைக்குச் சென்று அவருடன் வாக்குவாதம் செய்தார்.
உடனே தான் கொண்டுவந்திருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து, தனது இடதுகை மணிக்கட்டு பகுதியை பலமுறை கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அருகில் இருந்தோர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அனுமதித்தனர். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.