ADDED : ஜூன் 07, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
உலக சைக்கிள் தினத்தையொட்டி, கிரீடா பாரதி சார்பில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். திருப்பூர் வடக்கு எஸ்.ஐ. செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். கிரீடா பாரதியின் மாவட்ட தலைவர் டாக்டர் சுந்தரம், கரூர், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி விஜயலட்சுமி மற்றும் சிவக்குமார், செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியர் பதாகைகள் ஏந்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
–––
சைக்கிள் ஊர்வலம் சென்ற பள்ளி மாணவ, மாணவியர்.
