/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்யநேத்ரா பள்ளியில் மாணவர் தேர்தல்
/
வித்யநேத்ரா பள்ளியில் மாணவர் தேர்தல்
ADDED : ஜூலை 10, 2024 10:14 PM

உடுமலை : கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான தேர்தல் நடந்தது.
கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், மன்ற பொறுப்பாளர்கள் ஓட்டுப்பதிவின் வாயிலாக, தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பள்ளி மாணவர் தலைவராக பிளஸ் 2 வகுப்பு யோகேஷ், துணைத்தலைவராக ஒன்பதாம் வகுப்பு மாணவர் திவ்யதேஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஆசிரியர் அருண் பதவியேற்பு செய்து வைத்தார். தொடர்ந்து விளையாட்டுத்துறை செயலாளராக பிளஸ் 2 மாணவி காருண்யா தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு பள்ளி இடைநிலை ஒருங்கிணைப்பாளர் பராசக்தி, பதவியேற்பு செய்து வைத்தார்.
கலை இலக்கிய மன்ற செயலாளராக, பிளஸ் 1 வகுப்பு மாணவி ஸ்வேதா தேர்வு செய்யப்பட்டு, துவக்கநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பொறுப்பேற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
தொடர்ந்து பள்ளியின் விந்தியா, நீலகிரி, மகேந்திரகிரி, இமயம் உள்ளிட்ட அணிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.