/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் சாரதா பள்ளியில் மாணவருக்கு பரிசளிப்பு
/
ஜெய் சாரதா பள்ளியில் மாணவருக்கு பரிசளிப்பு
ADDED : மார் 07, 2025 03:50 AM

திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், பல்வேறு திறன் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு, பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் ஆசிரியர் பலர் பங்கேற்றனர். யோகா, பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பாக பயின்ற மாணவர்கள், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, சமூகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவித்த பள்ளி நிர்வாகத்துக்கு தன்னார்வ நிறுவனத்தால், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.